27 Jan 2015

ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார் - பொன்.செல்வராசா

SHARE
தற்போது நிலமை மாறியிருக்கின்றன கடந்த நிலமைகளைத் தொடரவிடாமல், இராஜதந்திர முறையில் பேச்சுவாத்தைகளை நடாத்தி வருகின்றோம், மேலும் நடாத்துவதற்குள்ளோம். இதுவரையில் புதிய ஜனாதிபதியுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது எமக்கு கடவுளால் கிடைத்த வரம். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் இந்துகலா மன்றத்தின் 36 வது ஆண்டுநிறைவு விழாவும், இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழாவும், பரிசழிப்பு நிகழ்வும், இன்று திருப்பழுகாமம் ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.

திருப்பழுகாமம், இந்து கலாமன்ற அறநெறிப் பாடசாலையின் அதிபர் வ.பரமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…..

65 ஆண்டு காலமாக நசுக்கப்பட்ட தமிழினம் அதிலும், 35 ஆண்டு காலாமாக மிகவும் குரோதமான முறையில் நசுக்கப்பட்டார்கள். உறவுகளையும், உடமைகழையும், உயிர்களையும், இழந்த எமது தமிழ் மக்களின் பிரதிபலிப்மை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு போர் மௌனித்தபோது அப்போதைய ஜனாதிபதி நாட்டில் சமாதானம் நிலபுவதாக அறிவித்திருந்தார். ஆனாலும் நிரந்தர உண்மையான சமாதானம் ஏற்பட்டிருக்கவில்லை.

2009 மே 19 இற்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம்பேர் காணாமல் போயுள்ளார்கள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன, இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள், இவ்வாறு அரச பயங்கரவாதம் தலை தூக்கியிருந்தது.

யுத்தம் மௌனித்த பின்னர் வடகிழக்கிலும். மற்றும் மலையகத்திலிருந்தும் காணாமல் போனோர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன.

காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு அன்றய ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட காணாமல் போனோர்களைக் கண்டறியும் ஆணைக்குழு கூறியிருந்தது.

ஆனால் தற்போதைய அரசாங்கம், காணாமல் போனவர்கள் தொடர்பாக வேறுவிதமாக செயற்படவதற்கு திட்டம் தீட்டியிருக்கின்றது.

எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ் போன்றோர் அப்போதைய கொடூர ஆட்சிக்காலத்திலேதான் சுட்டுக் கொல்லப்படார்கள்.

அதற்காக வேண்டி பழைய ஆட்சிக்கு எதிராக வடகிழக்கு மலையகம் உட்பட்ட தமிழ் மக்கள் மாத்திரமின்றி முஸ்லிம் மக்களும் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்திருந்தார்கள். அந்த அளவிற்கு கடந்த ஜனாதிபதித் தேத்தல் இடம்பெற்றிருந்தது. இந்த நாட்டை ஆண்டு வந்த தலைவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் சிறுபான்மையினம் ஒன்று கூடி கடந்த ஜனாதிபதி தேத்தலில் வாக்களித்திருந்தார்கள்.

தற்போதைய அரசுக்கு ஆதரவு வழங்கிக் கொண்டு வருகின்றோம். அனால் அமைச்சுப் பதவிகள் எமக்கு வலியவே வந்தன அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை அமைச்சுப் பதவியைய் பெறுவது எமது இலக்கு அல்ல.

எனவே அத்துமீறிய காணி அபகரிப்பு, அத்துமீணிய சிங்களக் குடியேற்றம், போன்ற பல விடையங்களை இந்த அரசினூடாக நிறுத்தப் போகின்றோம்.
அரசாங்கத்தினை ஆதரிக்கின்றோம் ஆனால் தவறுகள் விடப்படுமிடத்து நடவடிக்கையும் எடுக்கத் தயங்கமாட்டோம் என்பது உண்மை.

65 வருட காலமாக மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், எம்மை ஏமாற்றி வந்துள்ளன.

தற்போது நிலமை மாறியிருக்கின்றன கடந்த நிலமைகளைத் தொடரவிடாமல், இராஜதந்திர முறையில் பேச்சுவாத்தைகளை நடாத்தி வருகின்றோம், மேலும் நடாத்துவதற்குள்ளோம். இதுவரையில் புதிய ஜனாதிபதியுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது எமக்கு கடவுளால் கிடைத்த வரம்.

எனவே கடவுள் கொடுத்த இந்த வரத்தை சரியானமுறையில் பயன்படுத்த வேண்டும், அதுவரையில் பொறுத்திருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: