இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி பிரபுபிறேமானந்தாஜீ மகராஜ், இந்நிகழ்வில் கலந்து கொள்ள இலண்டனில் இருந்து வருகைதந்த கார்கில் நிறுவன முகாமைத்து வபணிப்பாளர் சத்தியானந்தராஜா சிவசங்கர், பத்மலோஜினி சத்தியானந்தராஜா, லவன் சத்தியானந்தராஜா, மற்றும், மாவட்டசெயலக, பிரதேசசெயலக, உத்தியோகத்தர்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் பொறுப்பாளர்கள், தொழில்க கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள், நிறுவனங்களின் திட்ட உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், பெற்றோர், கல்லூரிபயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஏழைமக்களை மிகஆழமாக நேசித்த சுவாமி விவேகானந்தர் பெரிதும் விரும்பியவாறு அவரது பிறந்த தினவிழாவில் வறிய பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களும், வழங்கிவைக்கப்பட்டதோடு, பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லமாணவிகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ்வாறான மனிதநேயப் பணிகளைத் தாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதோடு, சுவாமிவிவேகானந்தரின் சமூக நலச் சிந்தனைகளை வளர்ந்து வரும் இளம் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கிலும், மாணவர்களுக்கு மக்கள் சேவையின் மகத்துவத்தினை புரியவைக்கும் நோக்கிலும்தான் சுவாமிவிவேகானந்தரின் பிறந்ததினத்தினை வருடா வருடம் சிறப்பாக கொண்டாடி வருவதாக விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
சுவாமி விவேகானந்தரின் 153வது பிறந்ததின விழா நேற்று வெள்ளிக் கிழமை (23) சமூகநலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி பிரபுபிறேமானந்தாஜீ மகராஜ், இந்நிகழ்வில் கலந்து கொள்ள இலண்டனில் இருந்து வருகைதந்த கார்கில் நிறுவன முகாமைத்து வபணிப்பாளர் சத்தியானந்தராஜா சிவசங்கர், பத்மலோஜினி சத்தியானந்தராஜா, லவன் சத்தியானந்தராஜா, மற்றும், மாவட்டசெயலக, பிரதேசசெயலக, உத்தியோகத்தர்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் பொறுப்பாளர்கள், தொழில்க கல்வி நிறுவனங்களின் பணிப்பாளர்கள், நிறுவனங்களின் திட்ட உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், கழகங்களின் உறுப்பினர்கள், பெற்றோர், கல்லூரிபயிலுனர்கள், பாடசாலை மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஏழைமக்களை மிகஆழமாக நேசித்த சுவாமி விவேகானந்தர் பெரிதும் விரும்பியவாறு அவரது பிறந்த தினவிழாவில் வறிய பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களும், வழங்கிவைக்கப்பட்டதோடு, பழுகாமம் திலகவதியார் மகளிர் இல்லமாணவிகளின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ்வாறான மனிதநேயப் பணிகளைத் தாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதோடு, சுவாமிவிவேகானந்தரின் சமூக நலச் சிந்தனைகளை வளர்ந்து வரும் இளம் சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கிலும், மாணவர்களுக்கு மக்கள் சேவையின் மகத்துவத்தினை புரியவைக்கும் நோக்கிலும்தான் சுவாமிவிவேகானந்தரின் பிறந்ததினத்தினை வருடா வருடம் சிறப்பாக கொண்டாடி வருவதாக விவேகானந்தா தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment