31 Jan 2015

கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண வித்தியாலய வகுப்பறை கட்டுமானத்துக்கு 60 இலட்சம் ஒதுக்கீடு

SHARE
கிழக்குப்பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வேண்டுகோளின் பேரில் ஏ.ஐ.ஏ. இன்சுரன்ஸ் நிறுவனத்தினால்  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் 60 லட்சம் பெறுமதியான வகுப்பறைக்கட்டடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

இக்கட்டடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று முந்தினம் (27) காலை நடைபெற்றது.  இதில், இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவு  கட்டளைத்தளபதி பிரிகேடியர் தர்சண கெட்டியாராய்ச்சி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

அத்துடன், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிநேசன், பாடசாலை அதிபர் திருமதி எஸ்.ஞானப்பிரகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.(nl)
kok schl 2


kok school 1
kok schl 3
kok schl 4
kok schl 6
SHARE

Author: verified_user

0 Comments: