31 Jan 2015

வடகிழக்கு அமெரிக்காவைத் தாக்கிய ஜுனோ பனிப் புயல்

SHARE
வடகிழக்கு  அமெரிக்காவைத் தாக்கிய ஜுனோ பனிப் புயல் காரணமாக நியூயோர்க் நகரிலும் ஏனைய பிரதேசங்களிலும் சுமார் 03 அடி உயரத்தில் கிட்டத்தட்ட 90 சென்ரிமீற்றர் அளவு பனிப் பொழிவு இடம்பெற்றுள்ளது. 

நியூயோர்க் நகரில் அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை இரவு 11 மணியிலிருந்து பனிப்புயல் காரணமாக சாதாரண வாகனப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து சுரங்கப் பாதை போக்கு வரத்துக்களும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

நியூயோர்க், நியூஜெர்ஸி, கனக்ரிகட், ரொட்தீவு, மஸாசுஸெட்ஸ் மற்றும் நியூஹம்ஷியரில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி பனிப் புயலால் அமெரிக்க சனத்தொகையில் சுமார் 20 வீதமானோர் அதாவது  60 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நியூயோர்க் நகர சப் வே பாதைகள், வீதியோர பாதைகள், பாடசாலைகள் , உட்பட கிழக்கு கடற்கரைப்பிராந்தியத்தில் 6700 விமான சேவைகள் இரத்துச்  செய்யப்பட்டுள்ளன. அத்துடன் திங்கட்கிழமை முதல் வர்த்தக நிலையங்களும் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. நியூயோர்க் நகர வீதிகளில்  பனியை அகற்றும் நடவடிக்கையில் 2300 க்கு மேற்பட்ட பனியை அகற்றும் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மக்களை வீடுகளில் தங்கியிருக்குமாறு நியூயோர்க் நகர மேயர் பில் டி பிளஸியோ கோரியுள்ளார். அதேசமயம் கனக்ரிகட் மற்றும் மஸாசு ஸெட்ஸ் மாநிலங்களிலும் வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பனிப்புயல் குழப்பமான சூழல் நிலவிவந்த நேரத்தில் பாதுகாப்பு நோக்கங்கள் கருதி மக்களுக்கு பயணங்களுக்கோ வீடுகளை விட்டு வௌி வருவதற்கோ தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இத் தடையினை மீறி வௌியே வருபவர்களுக்கு சுமார் 300 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாக அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் வரலாறு காணாத மாபெரும் பனிப்புயல் இதுவாகும் என நியூயோர்க் நகர மேஜர் பில் டி பிலேசியோ தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நகர தலைவர்கள் மக்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அடிப்படை தேவைகளின் பொருட்டேயன்றி தேவைகள் எதுவுமின்றி யாரும் வௌியில் வர வேண்டாம் என அறிக்கை விடுத்தனர். நியூயோர்க் நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி பனிப்பொழிவுகளினால் வெறிச்சோடி காணப்படுவதாக அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: