பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை வெற்றி பெறச் செய்வதற்கு ஐக்கிய
தேசியக் கட்சியின் அதனைத்து ஆதரவாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்
என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை
உறுப்பினருமான தயா கமகே தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு கிளை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'இன்று நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த ஆட்சி மாற்றம் அவசியமாகும். அந்த வகையில், ஆட்சி மாற்றத்துக்கான சிறந்த சந்தர்ப்பமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளது.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுகின்றார். இவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்வது அனைவரினதும் பொறுப்பாகும். குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் இவரின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.
இன்றைய ஆட்சியில் ஊழல் மோசடி நிறைந்து காணப்படுகின்றது. இதை மாற்றி சிறந்த ஆட்சியை உருவாக்கவே பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேனா களமிறங்கியுள்ளார். சிறந்த ஆட்சியை உருவாக்குதவற்காக எங்களுக்குள் வேறுபாடுகளின்றி, நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டும்' எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான எம்.மாசிலாமணி, ஐக்கிய தேசியக் கட்சியின் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எல்.ரி.எம்.புர்கான், ஏறாவூர் அமைப்பாளர் எம்.கியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்

0 Comments:
Post a Comment