உலகெங்கிலும்
கோலாகலமான முறையில் டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதியான இன்று (25)
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது வெறுமனே பண்டிகை மட்டுமன்றி அனைத்து
மக்களுக்குமான சமாதான செய்தி வாழ்த்துக்களையும் தன்னகத்தே கொண்டு
இவ்வாண்டுக்கான நத்தார் பண்டிகை உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில்
திகைக்க வைக்கவுள்ளது.
நமது நாட்டில் முதல் முறை இவ் நத்தார்
பண்டிகையானது 1505 இல் இலங்கைக்கு கத்தோலிக்கர்களான போர்த்துக்கேயர்
வருகையை அடுத்தே நடைபெற்றது. 1505 நவம்பர் 15 இல் கொழும்புத் துறைமுகத்தை
அடைந்த லோரோன்சோ டி அல்மேதா தலைமையிலான போர்த்துக்கேய மாலுமிக் குழுவினர்
அங்கு தமது கப்பலை பழுதுபார்க்கும் பணிகளிலும் கோட்டே அரசனுடன்
தொடர்புகளையும் மேற்கொண்ட அதே வேலை கொழும்புத் துறைமுகத்தில் சிறிய
தேவாலயம் ஒன்றை கட்டினார்கள். இத்தேவாலயத்தில் 1505 முதலாவதாக கிறிஸ்துமஸ்
திவ்விய பலியை ஒப்புக் கொடுத்தார்கள்.
இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த
மதத்தவர்களாக காணப்படுகின்ற இவ்வேளையில் கிறிஸ்தவர்கள் 7 சதவீதம் மட்டுமே
உள்ளனர் எனினும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இலங்கையில் முக்கிய இடம்
பெற்று அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்கள் சமய
நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் அதே வேலை ஏனைய சமயத்தவர்களும் சமய சார்பற்ற
விடுமுறையாக கொண்டாடுகின்றனர். பல தொழில் நிறுவனங்களில் கிறிஸ்துமஸ்
விடுமுறைகள் விடப்படுவதோடு பல நிகழ்வுகளும் கொண்டாடப்படுவது வழமையான
நடைமுறையாகும். கிறிஸ்துமஸ் இலங்கையில் பொது விடுமுறை நாளாகும். இக்
கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 01 திகதியிலிருந்தே களைகட்ட தொடங்கி
விடும். ஆரம்பம் முதலே வானொலி தொலைக்காட்சி போன்றவற்றில் கிறிஸ்துமஸ்
சிந்தனைகள் கெரொல் இசைகள் என்பன ஒலி ஒளி பரப்பப்படும். விற்பனை
நிலையங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களையும் காணலாம்.
இவ்வகையில் இலங்கையில் வாழும் அனைத்து
கிறிஸ்தவ மதத்தவர்களுக்கும் எங்களது இனிய நத்தார் வாழ்த்துக்களையும்
புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.(nl)
0 Comments:
Post a Comment