18 Dec 2014

பேருக்கு உளநலப் பயிற்சி

SHARE
சிறு குற்றங்கள் புரிந்தவர்களான 25 பேருக்கு உளநலப் பயிற்சி அளிக்கப்படுவதாக சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் சுப்பிரமணியம் தயானந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவெடிவேம்பிலுள்ள உளநல புனர்வாழ்வு நிலையத்தில், சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பணிகள் வியாழக்கிழமை (18)  ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

மது பாவனையிலிருந்தும் போதைப்பொருள் பாவனையிலிருந்தும் விடுபடுதல் மற்றும் சமுதாயப்பிறழ்வு நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ளுதல் போன்ற விடயங்களில் இந்த உளநலப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக சமூக புனர்வாழ்வு உளநல சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட உளநல மருத்துவர் பி.ஜுடி ரமேஸ் ஜெயகுமார் தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் சிறைக்கைதிகளின் நன்னடத்தை பண்புகளை விருத்தி செய்து, அவர்களை சமூக வாழ்வில் மீண்டும் இணைத்துக்கொள்வதற்காக இத்தகைய வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதாக சுப்பிரமணியம் தயானந்தன் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம்  ஆகியவற்றில் சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 25 பேருக்கு இந்த உளநல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எஸ்.தயானந்தன், உளநல சேவைகள் நிலையத்தின் சிரேஷ்ட உளநல மருத்துவர் பி.ஜுடி ரமேஸ் ஜெயகுமார் உளநலப் பயிற்சித்தாதிகள் துஷ்யந்தி விஜயகுமார், சவுந்தரராஜா கோகுலராஜ், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் உளநல சீர்திருத்த ஆலோசனைகளை வழங்கின
SHARE

Author: verified_user

0 Comments: