3 Dec 2014

தேற்றாத்தீவு அறிவுவொளி பாலர் பாடசலையின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பும் வைபவமும்

SHARE
 தேற்றாத்தீவு அறிவெளி பாடசலையின் வருடாந்த கலைவிழாவும் பரிசளிப்பும் நேற்று (02.12.2014) செவ்வாய்கிழமை தேற்றாத்தீவு மாகா வித்தியாலய மண்டபத்தில் பி.ப 2.30 மணியளவில் பாலர் பாடசலையின் தலைவர் திரு.த.விமலானந்தராஜா தலைமையில் ஆரம்பமானது.
 
இவ் வைபவத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்கள் சிறப்பு அதிதியாகவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.காமினி இன்பராஜா அவர்களும் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்ததி சிவரெத்தினம் அவர்களும் கொளரவ அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.
 
இன் நிகழ்வுகளின் போது மாணவ மாணவியரின் பல மழலை ஆற்றுகை பல மேடையை அலங்கரித்தது.மேலும் மாணமாணவியர்களுக்கு பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
 
SHARE

Author: verified_user

0 Comments: