3 Dec 2014

காதலியின் தம்பியை அடித்து காயப்படுத்திய காதலன்

SHARE
அக்கா தன்னைத் திருமணம் செய்து கொள்வதற்கான சம்மதத்தை அம்மாவிடம் பெற்று வருமாறு கோரி காதலியின் தம்பியை தூதுவிட்டு அது கைகூடாததால் விரக்தியடைந்த காதலன் தூது சென்ற காதலியின் தம்பியையே அடித்துக்காயப்படுத்திய சம்பவமொன்று புணானையில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். புணானை ஓமடியாமடு பகுதியைச்சேர்ந்த 11 வயது யோகராசா சிந்துஜன் என்ற சிறுவன் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் 18வயது நிரம்பிய காதலனும் அவரது நண்பனான 17வயது நிரம்பிய சிறுவனும் இணைந்தே இத்தாக்குதலை மேற்கொண்டிருப்பதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் காதலனையும் அவரது நண்பரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: