31 Dec 2014

திருமலையில் வெள்ளம் வடிகிறது-சுமூகமான காலநிலை

SHARE
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் தற்சமயம் சுமூகமான காலநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.

கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தினூடாக பாயும் வெள்ள நீரின் அளவும் படிப்படியாக குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் பாலத்தினை கடந்து செல்லக்கூடிய சூழல் நேற்று காணப்பட்டது. குறித்த பாலத்தினூடாக மக்கள் உழவு இயந்திரங்கள் மூலமும் வாகனங்கள் மூலமும் நடை மூலமும் பாதுகாப்பாக செல்வதனை அவதானிக்ககூடியதாக இருந்தது.

குறிஞ்ஞாக்கேணி பாலம் வெள்ளம் காரணமாக உடைந்ததன் காரணமாக இதனூடான தரை மார்க்க போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் கடற்படையினர் இப்பிரதேசத்தில் படகு சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமலை – மட்டக்களப்பு வீதி இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. சுமூகமாக காலநிலை தொடர்ந்து நிலவும் பட்சத்தில் இதனூடான போக்குவரத்து விரைவில் சாத்தியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது திருமலை –மட்டக்களப்பு போக்குவரத்து ஹபரனை ஊடாக தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: