31 Dec 2014

சாய்ந்தமருதில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு!

SHARE
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் ஜெய்க்கா திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சாய்ந்தமருது பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆறு வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்று முந்தினம் திறந்து வைக்கப்பட்டன.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர். ஏ.எல்.எம்.அதாஉல்லா, சாய்ந்தமருது மாளிகைக்காடு வீதி, கல்யாண வீதி, அல்-ஹிலால் வீதி, ஜி.எம்.எம்.எஸ் வீதி,வைத்தியசாலை வீதி, மற்றும் ஒஸ்மன் வீதி ஆகியவற்றை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் விஷேட ஆலோசகருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோரும் இந்நிகழவில் கலந்து கொண்டனர்.(nl)
SHARE

Author: verified_user

0 Comments: