31 Dec 2014

பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு

SHARE
முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

கொழும்பு விகாரமகாதேவி பூங்கா பகுதியில் இடம்பெற்று வரும் தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் பைஸர் முஸ்தபா அமர்ந்துள்ளதுடன், அவர் தனது பிரதி அமைச்சு பதவியையும் இராஜினாமா செய்துள்ளார்.

பைஸர் முஸ்தபா மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளித்து இந்த மேடையில் ஏறியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் பொதுபல சேனா அமைப்பு மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளித்தால் தான் அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை என அறிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பில் ஊடக சந்திப்பு நடத்திய பொதுபலசேனா ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கப்படும் என அறிவித்தது.

இதனையடுத்து பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா திடீரென வெளிநாடு சென்றார். நாடு திரும்பியதும் தனது முடிவு அறிவிக்கப்படும் என கூறிய பைஸர் முஸ்தபா, இன்று மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தீர்மானித்துள்ளார்.(ad)
SHARE

Author: verified_user

0 Comments: