இலங்கையிலே தரித்திரியம் பிடித்த இரண்டு கட்சிகள் உண்டு அதில் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றயது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ். இந்த இரண்டு கட்சிகளும் எந்தப் பக்கம் போகின்றார்களோ அந்தப் பக்கம் தோல்வி உறுதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் அவர்களுடைய பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே தவிர சமூகநோக்கம் அவர்களுக்குக் கிடையாது.
என மீழ் குடியேற்றப் பிரதி அமைச்ச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் ஏற்பாட்டில் பட்டிருப்புத் தொகுதியில் அமையவுள்ள 100 வாக்களிப்பு நிலையங்களுக்கு 100 வாக்களிப்பு முகவர்களுக்கான நியமனங்கள் வழங்கும் கூட்டம் நேற்று செவ்வாய்க் கிழை (30) மாலை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.என மீழ் குடியேற்றப் பிரதி அமைச்ச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி கிராமத் தலைவர் அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இதன்போது கருத்து தெரிவிக்கையில்….
தேர்தலை நாங்கள் தவிர்க்க முடியாது. இதில் எமது மக்கள் விழிபு;புடன் இருக்க வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்கஸ என்ற ஒருவர் இல்லா விட்டால் இங்கு நடைபெறும் அபிவிருத்திகள் அனைத்தும் நடைபெற்றிருக்க மாட்டாது. எனவே நான் கூறிவருவது என்ன வெனறால், வெற்றிபெறக் கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்திலிருந்து யார்தான் வெளியேறினாலும் இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸதான் வெற்றிபெறப் போகின்றார் இதுதான் உண்மை.
இலங்கையிலே தரித்திரியம் பிடித்த இரண்டு கட்சிகள் உண்டு அதில் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மற்றயது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ். இந்த இரண்டு கட்சிகளும் எந்தப் பக்கம் போகின்றார்களோ அந்தப் பக்கம் தோல்வி உறுதி என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் அவர்களுடைய பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே தவிர சமூக நோக்கம் அவர்களுக்குக் கிடையாது.
கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதில் தேத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம், ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அதில் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்து மஹிந்த ராஜபக்கஸ வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ_ம் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியிருந்தன. அனால் அந்த தேர்தலில் சரத்பொன்சேகா தோல்வியடைந்து மஹிந்த ராஜபக்ஸ 18 லெட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். அதுபோல் இரண்டு தரித்திரியம் பிடித்த கட்சிகளும் எதிர்தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றி உறுதி செய்யப் பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு மானமுள்ள, தமிழ் மக்களுக்குரிய கட்சியாக, தமிழ் மக்களை நேசிக்கின்ற தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் இருந்திருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றது, என்பதை அறிவித்திருக்க மாட்டார்.
மைத்திரிபாலவுடன் சேர்திருப்பவர்கள் யார்? ஹெல உறுமைய, ஜேவிபி, வடக்குத் தமிழர்களுகுத் துரோகம் இழைத்த றிசாட் பதியுதீன், இப்படிப்பட்ட இனத்துவேசம் பிடித்தவர்கள்தான் பொது எதிரணியில் இருக்கின்றார்கள். இந்த நிலையில் இவர்களுடன் கைகோர்த்துள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுதான் வேடிக்கையாகும்.
காலாலை எதிர்த்து போராடியது ஹெல உறுமைய என்கின்ற கட்சிதான் அந்தக் கடசியின் பக்கம்போய் ஒட்டிக் கொண்டுள்ளது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுதான் வேடிக்கை. மைத்திரிபால என்பவரை இயக்கவது ஹெல உறுமையதான்.
தமிழ் மக்களைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு எடுத்துள்ளது. கடந்த யுத்த காலத்தில் வடபகுதியில் ஜெயசிக்குறு மோதல் நடைபெற்றபோது 6000 மட்டக்களப்பு மாவட்ட போராளிகளை இழதுள்ளோம். அதில் சரத் பொன்சேகா என்ற தளபதியோடுதான் யுத்தம் நடைபெற்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருக்கின்றவர்களின் பிள்ளைகள். அல்லது உறவினயர்கள் யாராவது அந்த யுத்ததில் இறந்துள்ளார்களா? இல்லை ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள அனைவரினதும் பிள்ளைகள், மற்றும் அவர்களது உவினர்கள் அனைவரும் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருகின்றார்கள் இதுதான் உண்மை. எனவே இந்த வருடத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை மட்டக்களப்பிலிருந்து தூக்கி எறிய வேண்டும்,
இலங்கை வரலாற்றில் மஹிந்த ரஜபக்ஸ ஜனாதிபதி மட்டும்தான தமிழ் பேசிய ஜனாதிபதியாவார். இந்நிலையில் தற்போதைய அமைதியான சூழலில். அபிவிருத்திகள் பல நடைபெற்று வருகின்ற. எனவே நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறப் போகின்றவர் நம்முடைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஸதான் இந்த வெற்றியில் நம்முடைய தமிழ் மக்களும் பங்கெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment