இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களை கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கிழக்கில் தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றதனால் மக்கள் பெரும் இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாழ் நிலங்களிலுள்ள பிரதேசங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு தாழ் நிலப்பகுதிகளிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்த தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வெள்ள அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களை இன்று வெள்ளிக்கிழமை (26) கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுவர்ணராஜா நேரில் சென்று பார்வையிட்டு தற்காலிக முகாம்களிலுள்ள மக்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்துள்ளார்.
காரைதீவு, கல்முனை, நீலாவணை, மற்றும் ஒந்தாச்சிமடம் போன்ற பகுதிகளுக்கு சென்ற அவர் அங்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களைச் சந்தித்து கேட்டறிது கொணடுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

0 Comments:
Post a Comment