12 Dec 2025

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் விபத்து.

SHARE

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் விபத்து.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை(12.12.2025) அதிகாலை கோழி ஏற்றிவந்த கப் ரக வாகனம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கோழிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு பப்பமிருந்து கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணிக்கும் போது வீதியில் நின்ற மாட்டுடன் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் சிக்கிய மாடு சம்பவ இடத்தில் உயிரிழந்ததோடு கோழிகளை ஏற்றிவந்த வாகனத்தில் பயணித்தோரும் காயமடைந்துள்ளனர். 

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












SHARE

Author: verified_user

0 Comments: