6 Dec 2014

தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் மாறினாலும் தமிழ் மக்கள் மாறமாட்டார்கள் இது வரலாறு - பா.அரியநேத்திரன் பா.உ

SHARE
(ஆர்.தில்லை)
அண்மைக்காலமாக குறிப்பாக ஐனாதிபதி தேர்தல் அறிவிப்புக்குப் பின் கட்சி
தாவல்கள் தொடர்பான செய்திகள் களைகட்டியுள்ள வேளையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு இரண்டு பிரதேச்சபை உறுப்பினர்கள் அரசு பக்கம்
இணைந்துள்னர் இன்னும் சிலர் இணைவதாக கதைகள் அடிபடும் நிலையில் இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைதமிழரசுக்கட்சியின் ஊடக செயலாளருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரனிடம்  இது     தொடர்பாக  கேட்டபோது அவர்கூறிய விளக்கம்வருமாறு.

 எமது தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்தும்திருமலைசேருவில பிரதேச்சபை உறுப்பினர் ஒருவரும்இ அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேசசபை உறுப்பினர் ஒருவரும் அரசதரப்பில் இணைந்துள்ளனர் என்பதை அவர்களாகவே ஊடகங்களில் ஒப்புக்கொண்டுள்னர்.

உண்மையில் ஒரு பிரதேச்சபை உறுப்பினர் ஒருவர் தாம் சாந்த அரசியல் கட்சியில் இருந்து விலகி இன்னுமொரு கட்சியில் இணைந்து கொள்வாரானால் அவர் ஏற்கனவே அங்கம் வகித்த கட்சியினால்உடனடியாகவே தேர்தல் ஆணையாளரிடம்  எழுத்து  மூலமான கடித்த்தை சமர்பித்து அந்த உறுப்பினரை அகற்றிவிட்டுஅந்தஇடத்திற்கு பட்டியலில் அடுத்தநிலையில் உள்ளவரை அல்லது கட்சி விரும்புகின்ற ஒருவரை நியமிக்கமுடியும்.

மேற்குறிப்பிட்ட எமது தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து அரசு பக்கம் சென்ற இரண்டு பிரதேச்சபை உறுப்பினர்களுக்கும் பதிலாக வேறு உறுப்பினர்கள் நியமிக்கும் நடவடிக்கை எமது கட்சி மேற்கொண்டுள்ளதுஇ

மாகாணசபை உறுப்பினர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களை பொறுத்தமட்
டில் இவ்வாறு தாவும் உறுப்பினர்களைஉடனடியாக நிறுத்தமுடியாவிட்டாலும்
நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தாக்கல்செய்யப்பட்டு அதன் தீர்பைப்பொறுத்து
அந்த உறுப்பினரை மாற்றலாம் இதற்குகாலவகாசம் எடுக்கும் அது நீதிமன்றத்
தைபொறுத்து அமையும்.

தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து யார்தான் சோரம்போனாலும் யார்தான் பணம் பதவிக்காக அரசு பக்கம் தாவினாலும் அவரை வடகிழக்கு மக்கள் நிராகரித்த வரலாறுதான் உண்மை இதற்குபல உதாரணங்களை சொல்லமுடியும்.

கடந்த 2004ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி சார்பாக பாராளுமன்ற  தேர்தலில் ஏறக்குறைய நாப்பதாயிரம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற மட்டக்களப்புமாவட்டபாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஷ்வரி
2010ம் ஆண்டு தேர்தலில் அரசுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு ஆயிரத்துக்கு குறைவான வாக்குகளைமட்டுமே பெற்றார்.

வன்னிமாவட்டத்தில் 2004ம்ஆண்டு தமிழ்தேசிய கூட்டமைப்பில் சுமார் முப்பத்தையிரம் வாக்குகளைபெற்று வெற்றியீட்டிய கனகரெடணமும்இ
 இருபத்தையாயிரம் வாக்குகளை பெற்று வெற்றியீட்டிய வவுனியா கிசோரும்
 கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் அரசுபக்கம் சோரம் போய் ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பில்  போட்டியிட்டுஅவர்கள் இருவரும் ஆயிரம் வாக்குக
ளைகூட பெறமுடியவில்லை.

இதேபோன்றுதான் கடந்த 2010ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்
றப்பொதுத்தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு இருபத்தி ஆறாயிரத்து எண்ணூற்று தொட்ணூற்றிஐந்து(26895) வாக்குகள்கிடைத்து அதில் ஏறக்குறைய பதினொராயிரம் விருப்பு வாக்குகளை பெற்று தெரிவான பிஐயசேன அரசுபக்
கம் நீலசால்வையுடன் சோரம் போனாலும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள்
எவரும் அவருக்குப்பின்னால் செல்லவில்லை இதற்கு எடுத்துக்காட்டு கடந்த
2010ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ்தேசியகூட்டமைப்பு பெற்ற வாக்குகளை
விட 2012ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்குமாகாண சபை தேர்தலில் நாற்பத்து நான்காயிரத்து எழுநூற்றி பதினாறு (44716)வாக்குகள் கூடுதலாககிடைத்தது.

 இதில்இருந்துதெளிவாகவிளங்கிக்
கொள்முடியும் அம்பாறையில;  பிஐயசேனா அரசு பக்கம் தாவி அபிவிருத்திகளை செய்தாலும் அம்பாறை தமிழ்மக்கள் அரசுக்கு வாக்களிக்கவில்லை இதேபோலதான் வடக்குகிழக்கில் உள்ள எல்லாத்
தமிழ்மக்களும் கொண்டகொள்கையில் இருந்து மாறாதவர்கள் என்பதை தொடர்ந்து நிருபித்துள்ளனர்.

ஏனயகட்சி மக்கள்பிரதிநிதிகள் அரசுபக்கம் தாவினால் அவர்களின் ஆதரவாளர்கள் அவர்களுடன் இணைவதுபோல்வடகிழக்கு தமிழினம் ஒருக்காலும் சோரம்போகாது என்பதை கடந்த காலவரலாறுகள் தெளிவுபடுத்துகின்றது.

தமிழ் தேசியகூட்டமைப்பில் இருந்து விலகி  பேரினவாத கட்சியில் எவர் இணைந்து போட்டியிட்டாலும் அல்லது எமது தலைமை களில் யார்தான் மாறினாலும் மக்கள் மாறமாட்டார்கள்.

எனவே ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் இவ்வாறான சம்பவங்களும் சில
வதந்திகளும் இடம்பெற்றாலும் எமதுதமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்துபேரினவாத கட்சிகளில் இணையும் எந்த ஒரு தமிழரையும் வடகிழக்கு
தமிழினம் ஏற்றுக்கொண்டதாக சரித்திரம் இல்லை.

இதனை அனைவரும் புரிந்துகொள்ளுமாறும் எந்தவொரு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரோ மாகாணசபைஉறுப்பினரோ எக்காரணம் கொண்டும் அரசுபக்கம் செல்லமாட்டார்கள்என்பதைஉறுதுயுடன் அரியம் எம்.பி மேலும் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: