மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில்
இதன் காரணமாக அதிகளவான மக்கள் இடம் பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர் இந்
நிலையில் இதனை எதிர் கொண்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் தொடர்பாக
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அறிவுறுத்தும் அவசர கூட்டம் நேற்று
வெள்ளிக் கிழமை (25) மன்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாகத்தில் இடம்
பெற்றது.மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது கலந்து கொண்டு மேற்படி உத்தியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மக்களின் நன்மைகருதி இரவு பகல்பாராது சேவையாற்ற வேண்டும்;. ஏன்பதுடன் இதற்கு தேவையான நிதிகள் ஐனாதிபதியினால் ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதன் பிரகாரம் அனைத்து உத்தியோகஸ்தர்களும், பாராபட்சமின்றி செயற்படவேண்டும்.
எந்தவித மனித உயிர்களும், காவுகொள்ளக் கூடாதவகையில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுமாறு கேட்டுக் கொண்டதுடன் தேவையேற்படின் நேரடியாக அவருடன்; தொடர்பு கொள்ளுமாறும் மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.



0 Comments:
Post a Comment