அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்களுக்கிடையிலான
பிரியாவிடை உதைப்பந்தாட்டப் போட்டி இன்று (3) காலை பாடசாலை மைதானத்தில்
இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.இத்ரீஸ் தலையில் இடம்பெற்ற இந்த விளையாட்டுப்
போட்டிக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை
மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் கலந்துகொண்டார்.
இந்த புரிந்துணர்வு உதைப்பந்தாட்டப் போட்டியில் 1:0 என்ற அடிப்படையில்
ஆசிரியர்கள் அணி மாணவர்கள் அணியை ஒரு கோள் அடித்து வெற்றி கொண்டது.
இப்போட்டியில் கலந்து கொண்ட இரு அணிகளுக்கும் கேடயங்களும் பணப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த விளையாட்டு நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்
ஏ.எஸ்.எம்.உவைஸ் மற்றும் பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.அப்துல் ஹை, அம்பாறை
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் அமைப்பாளர் எம்.ஐ.றியாஸ்
அதிபர், பாடசாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் என
பலரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment