3 Dec 2014

இனிவரும் காலங்களில் சிறியளவிலான தொழிற்சாலை ஒன்று அமைத்துக் கொடுக்கும் - தர்சன்

SHARE
செயற்திட்டங்களின் மூலம் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு எதிர் காலத்தில் சிறியளவிலான தொழிற்சாலை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் செயற்படுவோம் என ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் ஈ.தர்சன் கருத்துத் தெரிவித்தார்.

ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் வவுணதீவு இலுப்படிச்சேனை கிராமசேவக பிரிவின் இரண்டு வருட வாழ்வாதாரச் செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்வில் நேற்று செவ்வாய் கிழமை (02) இலுப்படிச்சேனையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

எமது செயற்திட்டமானது வவுணதீவு பிரதேச செயலக பிரிவின் இலுப்படிச்சேனை கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட , வாழைக்காலை, சின்னகாலபோட்டமடு, நாவற்தோட்டம், இலுப்படிச்சேனை ஆகிய கிராமங்களில் 350 இற்கு மேற்பட்ட குடுப்பங்களின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி, பெண்தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரம், மேட்டுநில பயிர்செய்கைக்கான நிலக்கடலை, சோளன், விதைநெல் வழங்கல் என உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் வாழ்வாதார முயற்சியிலான பயிற்சிகள் வழங்கல், சிறுவர் பாதுகாப்பு, அடிப்படை மனித உரிமைகள், சிறுவர் போசாக்கு, தாய், சேய் நலன், சூழல் சார்ந்த விழிப்புணர்வு, சேதனபசளை தயாரித்தல், அறுவடைக்குப் பின்னான தொழிநுட்பம் என விவசாயம் சார்ந்த பயிற்சிகள், தலைமைத்துவம், தொழில் அபிவிருத்தி பயிற்சிகள், பெண்கள் சமத்துவம் போன்ற பல பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றுக் குறிப்;பாக பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான பனையோலையிலான கைப்பணிப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி என்பன கொடுக்கப்பட்டுள்ளது.  திட்டம் செயற்படுத்தும் கிராம மட்டத்தில் 27 பேர்கள் கொண்ட சமூக ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் செயற்திட்டத்தின் நிறைவின் பின்னர் கிராம மட்டத்தில் அபிவிருத்திற்காகவும் தொழில் ஊக்குவிப்புக்காகவும் செயற்படவுள்ளனர்.

இச்செயற்திட்டத்தின் மூலமாக இக்கிராமங்களில் உள்ள 1348 பேர்களில் அனைவரும்  குறைந்தது ஒரு விதத்திலேனும் பயனடைந்துள்ளனர்.  எமது இரண்டு வருடகால திட்டம் நிறைவடைந்துள்ள இச்சந்தர்ப்;பத்தில் இனிவரும் காலங்களில் இக்கிராமத்தில் சிறியளவிலான தொழிற்சாலை ஒன்று அமைத்துக் கொடுக்கும் நோக்கில் செயற்படுவோம்.

இலுப்படிச்சேனை பல்தேவை கட்டடத்தின் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் திட்ட இணைப்பாளர் வசந்தகுமார் ரோகிணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் திட்ட இணபை;பாளர் கே.சுதாகரன், மண்முனைமேற்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்கான கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அரசகுமார், சமுர்த்தி உத்தியோகத்தர் கே.சிவசம்பு,பொருளாதார உத்தியோகத்தர் எஸ்.இளங்கோ, மற்றும் திட்டம் நடைமுறைப்படுத்திய கிராமங்களின் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: