18 Dec 2014

வறிய குடும்பங்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான கோழிக் குஞ்சிகள் கையளிக்கப்பட்டுள்ளன

SHARE
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 75 வறிய குடும்பங்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான கோழிக் குஞ்சிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

திருக்கோவில் பிரதேச திவிநெகும அதிகாரி வி.அரசரெத்தினம் தலைமையில் திவிநெகும அலுவலகத்தில் புதன்கிழமை(17) நடைபெற்ற நிகழ்வில் இவை வழங்கப்பட்டன.

இதன்போது திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, திருக்கோவில் பிரதேச சபை ஐ.ம.சு.முன்னனியின் உறுப்பினர் எஸ்.விக்னேஸ்வரன், திருக்கோவில் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: