18 Dec 2014

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் விபத்து

SHARE
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று (18) பகல் 12.20 மணிக்கு இடம்பெற்ற வீதி விபத்தினால் பிரதேச போக்குவரத்து சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து பொலிஸார் ஸ்தலத்துக்கு வராமையினால், இவ்வீதியை பயன்படுத்துவோர் அசௌகரியங்களுக்குள்ளாகினர்.

தனியார் போக்குவரத்து பஸ் ஒன்று குறித்த பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் ஒருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இரு பஸ்களும் சிறிது சேதத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
SHARE

Author: verified_user

0 Comments: