28 Dec 2014

மு.கா மைத்திரிக்கு ஆதரவு - அமைச்சுப் பதவியை துறக்கும் ஹக்கீம்

SHARE
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அக் கட்சியில் கடந்த காலங்களில் குழப்ப நிலை நீடித்து வந்தது.

பலமுறை கூடிய ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்களின் கூட்டம் இணக்கப்பாடின்றி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவிலயாளர் சந்திப்பில் அக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் தான் வகிக்கும் நீதி அமைச்சர் பதவியையும் இராஜனாமா செய்யவுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: