28 Dec 2014

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகின.

SHARE
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகின. 

இதில் அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.ஜீ.ஹிருணி உதாரா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு, மூன்றாம் இடத்தினை திருகோணமலையைச் சேர்ந்த சிவகுமார் இந்துஜன் பெற்றுக் கொண்டுள்ளார். 

மேலும் கணிதப் பிரிவில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாகியராஜ் தருகீசன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். 

வர்த்தகப் பிரிவில் காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தின் பியூமி தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

மேலும் கலை பிரிவில் கொழும்பு விஷாகா பாலிகா மகா வித்தியாலயத்தின் நெத்சலா பதிரண முதலிடத்தைப் பிடித்துள்ளார். 
SHARE

Author: verified_user

0 Comments: