24 Dec 2014

இடைத் தங்கல் முகாம்களிலுள்ள மக்களுக்கு சுகாதாரப் பொதி வழங்க இ.செ.சங்கம் தீர்மானம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பிரதேசத்தில் மழை வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினர் இன்று புதன் கிழமை (24)  நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அம்மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.

படுவான்கரைப் பிரதேசமான வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம், பெரியபோரதிவு பாரதி வித்தியாலயம், திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயம், திருப்பழுகாமம் கண்டு மணி வித்தியாலயம், அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலம், ஆகிய பாடசாலைகளில் தங்கியுள்ள மக்களையே  இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பார்வையிட்டுள்ளனர்.

இந்நிலையில் இம்மக்களுக்கு தற்போது சுகாதாரப் பொதி அவசிய தேவை உள்ளது என போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்துள்ளதாகவும், சுகாதாரப் பொதிகளை தாம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தாரஜா தெரிவித்தார்.
















SHARE

Author: verified_user

0 Comments: