17 Dec 2014

பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்

SHARE

நீதியாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடாத்த பொலிஸார் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மற்றும் வடமத்திய மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு திங்கட்கிழமை (15) நடாத்தப்பட்ட செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் பிரியந்த ஆர்.பி. பெரேரா தலைமையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகளுக்கான தேர்தல் நடைமுறைகள் பற்றி இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டதோடு மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களான கலாநிதி. பிரதீபா மகாநாம ஹேவா, ஆணையாளர் திரு.ரி.இ. ஆனந்தராஜா, ஆணைக்குழுவின் நீதிச் செயலாளர் சடடத்தரணி நிமால் புஞ்சிஹேவா, ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரசன்னா அரம்பத், ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொள்ளக் கூடாது. தேர்தல் சட்டத்தை மீறும் யாராக இருந்தாலும் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: