செழிப்பான இல்லம் ‘எனும் தொனிப்பொருளில்
வாழ்வின் எழுச்சி திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த
வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவி வழங்கும்
பணிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நடவடிக்கையில் துரிதமாக
இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு
குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் 8560 -தமிழ்-முஸ்லிம் வாழ்வின் எழுச்சி
திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தில் சுமார்
600 பேருக்கு வீட்டு மானிய உதவி வழங்கும் நிகழ்வு
செவ்வாய்க்கிழமை (16) காத்தான்குடி ரெலிகோம் வீதியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.
வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் மண்முனை வடக்கு பிரதேச திவிநெகும
அதிகாரி திருமதி .கலை செல்வி வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின்
தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான
எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு மேற்படி 600 பேருக்கு வீட்டு
மானிய முதற்கட்ட உதவித் தொகை 2500 ரூபாவை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின் மட்டக்களப்பு
மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.முஸம்மில் ,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின்
இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின் , கல்லடி பிரதேச வாழ்வின் எழுச்சி
திவிநெகும வங்கி முகாமையாளர் கே. தங்;கதுரை,திட்ட முகாமையாளர்
திருமதி.பாலசுந்தரம் ஷாமினி, வாழ்வின் எழுச்சி திவிநெகும திணைக்கத்தின்
மண்முனை வடக்கு பிரதேச திவிநெகும உத்தியோகத்தர்கள் உட்பட பெருமளவிளான
திவிநெகும பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment