ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற மாதாந்த அமர்வில், வரவு செலவுத்திட்டத்துக்கு அனைத்து உறுப்பினர்களும் தமது கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.
வரவு -செலவுத்திட்டத்தை முன்மொழிந்து ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா உரையாற்றினார். இதையடுத்து, உறுப்பினர் ஐ.ஏ.வாசித் பிரேரிக்க உறுப்பினர் பி.எம்.ஏ.அமீன் இஸ்ஸத் ஆஸாத் வழிமொழிந்தார்.
இதன் பிரகாரம் 2015ஆம் ஆண்டுக்கான வருமானம் 7 கோடியே 83 இலட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். செலவினம் 7 கோடியே 83 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனடிப்படையில் 1,500 ரூபாய் மிகை வருமானமாக கொள்ளப்படுகிறது.
ஏறாவூர் நகரசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்; இருவரும் சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் உள்ளனர். (tm)
0 Comments:
Post a Comment