19 Dec 2014

புணரமைக்கப்பட்ட வீதி மக்கள் பாவனைக்கு

SHARE
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சவுக்கடி பிரதான வீதியில் புனரமைப்பின்றி காணப்பட்ட  200 மீற்றர் நீளமான  வீதி,  கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வியாழக்கிழமை (18) விடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து 200 மீற்றர் நீளமான இந்த வீதி,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 20 இலட்சம் ரூபாய் விசேட ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு  மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்(tm)
SHARE

Author: verified_user

0 Comments: