அருநெலு' சிறுவர் சேமிப்பு கணக்கை கொண்டுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு 'அருநெலு' பரிசுப் பொருட்கள் இன்று (2014.12.23) கல்முனை கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் ஜெ.எம்.சித்தீக் தலைமையில் வழங்கப்பட்டன.
பாண்டிருப்பு அல்-மினன் வித்தியாலைய மாணவன் எ.எப்.தானிஸ், கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரி மாணவண் கே.நிரூஜித், கோட்டைக் கல்லாறு கண்ணகி வித்தியாலைய மாணவன் எஸ்.பனோஷ் ஆகிய மாணவர்களுக்கே இந்த பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற இந்த மாணவர்களில் இருவருக்கு தலா 10.000 ரூபாவும் ஒருவருக்கு 5.000 ரூபாவும் ஏற்கெனவே வைப்பிலிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்கள், கொமர்ஷல் வங்கியின் உத்தியோகத்தர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


0 Comments:
Post a Comment