பெரியநீலாவணை சநதியில்; இருந்து துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீயின் ஓரமாக இருக்கும் ரெலிக்கம் கம்பத்தில் மோட்டார் சைக்கில் மோதியதில் துறைநீலாவணையினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார் இச்சம்பவம் ச 8 ஆம் திகதி சனிக்கிழமைஇரவு இடம்பெற்றுள்ளது
இதில் துறைநீலாவணை 5 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த அருள்பிரகாசம் தமிழ்வேந்தன் (23) எனும் இளைஞனே இவ்விபத்தில் பலியாகியுள்ளார்
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் துறைநீலாவணையில் இருந்து மோட்டார் சைக்கில் பிரதான வீதியால் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து கம்பத்துடன் மோதியதாலே விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது
இது தொடர்பான மேலதிக விசாரணையினை கல்முனைப் பொலிஸ் மேற்கொண்டு வருவதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment