9 Nov 2014

பிரபாகணேசன் இலங்கை பாராளுமன்றாத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் சமையல்காரராகவும், உணவு உபசரிப்பாளராகவும் இருக்கின்றார் – எனக் கூறுகின்றார் அரியநேத்திரன் எம்.பி

SHARE

பிரபாகணேசன் இலங்கை பாராளுமன்றாத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் சமையல்காரராகவும் உணவு உபசரிப்பாளராகவும் இருக்கின்றார் என்பது இப்போதுதான் எமக்குத் தெரியும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்ரிரன் கூறினார்.

பாராளுமன்றம் கலையும் காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் 110வது அமைச்சராக பதவியேற்ற தொலைத்தொடர்பு தொழிநுட்ப பிரதி அமைச்சர் பிரபா கணேசன் மட்டக்களப்பிற்கு வருகைதந்தபோது கூறிய கருத்துத்தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும்போதே இதனைத்தெரிவித்தார்.

தொடர்ந்தும் இவர் கருத்துத்தெரிவிக்கையில்
த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் வருவது அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் உணவு உண்பதற்கே எனக்கூறியிருக்கின்றார்.

பிரபாகணேசனின் அரசியல் வரலாறு எப்படிப்பட்டதென்பது எங்களுக்குத்தெரியும் ஆனால் த.தே.கூட்;டமைப்பினைப்பற்றி அதுவும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப்பற்றி கதைப்பதற்கோஇ விமர்சிப்பதற்கோ இவருக்கு எந்த அருகதையும் இல்லை.

இவர் உப்புச்சப்பு இல்லாத அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு மட்டக்களப்பிற்கு வருகைதந்து உப்புச்சப்பு இல்லாத விடயங்களைக்கூறுவதென்பது அது அவருக்கும் அவரது அரசாங்கத்திற்கு நல்லதாக இருக்கலாம் ஆனால் த.தே.கூட்டமைப்பினரைப்பற்றி கதைக்கவேண்டிய தேவை அவருக்கில்லை என்பதனை முதலில் அவர் புரிந்து கொள்ளவேண்டும்.

நாங்கள் எங்களது பண்முகப்படுத்தப்பட்ட நிதியினை எங்கள் மக்களுக்காகவேண்டி அதனை ஒதுக்கி அதற்கான வேலைத்திட்டங்களை செய்து வருகின்றோம் அவ்வாறிருக்கையில் இருக்கையில் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் பண்முகப்படுத்தப்பட்ட நிதி மக்களுக்கு பயன்படுத்தப்படாமல் திரும்பிப்போவதாக கூறியிருக்கின்றார்.
ஆகவே எந்த வருடத்தில் எந்தப்பாராளுமன்ற உறுப்பினரது நிதி மக்களுக்கு பயன்படாமல் திரும்பிப்போயிருக்கின்றது என்பதனை அவர் தெளிவு படுத்தவேண்டும்.

இவர் முதலில் செய்வேண்டிய வேலை என்னவென்றால் உடனடியாக மலையக மக்களின் இன்றையதேவை என்ன என்பதனை அறிந்து அது தொடர்பாக ஜனாதிபதியிடம் சென்று அந்த மக்களின் அவலங்கள் பற்றி கதைத்து அதனை தீர்ப்பதற்காகன வழிவகைகளை மேற்கொள்வேண்டியதுதான் இவரது இன்றைய தேவையாகும்.
இதனை விடுத்து எல்லா நாம்பனும் ஓடுவது போன்று வயிற்றுக்கன்றுக்குட்டியும் ஓடுவதென்ற பழமொழியொன்றுண்டு அதேபோன்றுதான் எல்லோரும் த.தே.கூட்டமைப்பினரைப்பற்றி கதைக்கின்றார்கள் என்பதற்காக இந்தப்பிரபா கணேசனும் கதைப்பதென்பது பொருத்தமானதல்ல என்பதனை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
ஆகவே தங்களின் அரசியலுக்காக த.தே.கூட்டமைப்பினரை பற்றி கதைப்பதையோஇ விமர்சிப்பதையோ 110 அமைச்சராக இருக்கும் பிரபாகணேசன் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: