26 Nov 2014

ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் அமைப்பினால் கிளிநொச்சி முல்லைத்தீவு மாணவர்களுக்கு உதவி

SHARE
 ஸ்டாசொலிடார்டி  பவுண்டேசன் அமைப்பினால்  கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப் பட்ட  அங்கவீனமுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  கிளிஃ குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கவலன்   பாடசாலையில் இன்று புதன்கிழமை (26) நடைபெற்றது.
மாற்று திறனாளிகள் செயற்கை உறுப்பு அமைப்பின் இணைப்பாளர் அ.அன்ரனி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்.

முல்லைத்தீவு மாவட்ட உதவிக்கல்வி பணிப்பாளர்  மைக்கல் தியாகராஜா விஸ்வமடு திருச்சபை பங்குத்தந்தை வண. அசோக்   ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் அமைப்பின் செயலாளர்  வே. வாமதேவன் இபுன்னைனீராவிக் கிராம சேவகர் கோ.சேகர் மற்றும் பெற்றோர்களும் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது  கொப்பி, புத்தகப்பை  போன் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் அமைப்பினால் ஏற்கனவே  கிளிநொச்சியில் உள்ள தந்தையை இழந்த 20 பிள்ளைகளுக்கு ஒரு வருடமாக கல்வி மேம்பாட்டுக்கு மாதாந்தம் 3000/- வழங்கப்பட்டு வருகின்றமையும். குறிப்பிடத் தக்கதாகும். 




SHARE

Author: verified_user

0 Comments: