26 Nov 2014

பெண்களுக்கானஅழகுக்கலைபயிற்சிநெறிஅரசடித்தீவுசக்திமகளீர் இல்லத்தில் ஆரம்பம்

SHARE
தற்காலத்தில்பெண்களின்அழகுக்கலைதொழில்என்பதுமிகவும் பாரியவருமானம்மிக்க ஓர் சுயதொழிலாக அமைந்து வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் வாழும் பெரும்பாலான யுவதிகள் தொழில்வாய்ப்புக்கள் இல்லாமல் வீட்டுப்பணிப் பெண்களாக வெளிநாடுசென்று பெரிதும்கஸ்டங்களுக்குள்ஆளாகின்றனர்.

அவ்வாறான பெண்களது சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்லாந்து நாட்டு நிதியுதவியில் மட்டக்களப்பு ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் எனும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசடித்தீவு சக்திமகளீர் இல்லத்தில் அப்பகுதி யுவதிகளுக்கு மூன்று மாதகால அழகுக்கலை பயிற்சிநெறி நேற்று செவ்வாய் கிழமை (25) ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

6 மாதங்களைக் கொண்ட இப்பயிற்சி நெறியின் முடிவின்போது சான்றிதழ்களும் வழங்கப் படவுள்ளன.

அமைப்பின் ஸ்டாசொலிடார்டி பவுண்டேசன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் வ.கமலதாஸ் தலைமையில் இந்நிகழ்வு ஆரமபிக்கப் பட்டள்ளது.

மேலும் இப்பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கும் வகையில் சுவிஸ்நாட்டு ஸ்டாசொலிடார்டி அமைப்பின் பணிப்பாளர் எஸ்.ஆதிரியன் மற்றும், அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் ரீ.தியாகராஜா அழகுக்கலை பயிற்றுனர் வி.சித்ரா ஸ்டா அமைப்பின் உத்தியோகத்தர்தர்கள், உட்பட இப்பயிற்சி நெறியினை மேற்கொள்ளவிருக்கும் தெரிவு செய்யப்பட்ட 25 யுவதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: