6 Nov 2014

போரதீவுப் பற்றில் முதியோருக்கு சமூக சேவைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

SHARE
ஜனா -

கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு  செவ்வாய்க் கிழமை (04) சமூகசேவைகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதிவுப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சமூக சேவைத் திணைகளத்திலிருந்து முதியோர்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய, பொதுசன மாதாந்த  உதவி பெறுவதற்கு தேவையான தகுதிகள், நோய் உதவிக் கொடுப்பனவு வழங்கப்படும் முறை, வலுவிழந்தோருக்கு வழங்கப்படும் உபகரண வசதிகள், சுயதொழில் உதவிக் கொடுப்பனவுகள், சிறு நிவாரணக் கொடுப்பனவுகள், இவ்வாறான உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பிரதேச சமூக சேவை உத்தியோகஸ்தரிடம்  சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், மாகாண மற்றும் மதிய அரசின் செயற்பாடுகள் போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது விழக்கமளிக்கப் பட்டமாக போரதிவுப்பற்று பிரதேசத்தின் சமூகசேவை உத்தியோகஸ்தர் இ.சிவலிங்கம் கூறினார்.

போரதீவுப்பற்று பரதேச செயலாளர் ந.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூகசேவை உத்தியோகஸ்தர் இ.சிவலிங்கம், முதியொர் உரிமை மேம்பாட்டு உத்தயோகஸ்தர் எஸ்.மதிசுதன், சிறுவர் உரிமை மேம்பாட்டுஉத்தியொகஸ்தர் கே.கரணாகரன், மற்றும் போரதிவுப் பற்றுப் பரதேசத்திலுள்ள முதியோர் சங்கங்களன் பரதிநதிகளும் இதல் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: