6 Nov 2014

அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைக் கூட்டம் .

SHARE
(ஜனா)

அனர்த்த முகாமைத்துவ  ஒருங்கிணைக் கூட்டம் ஒன்று இன்று திங்கட் கிழமை (03) மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


வட கீழ் பருவ பெயர்ச்சி மழை ஆரம்பித்து விட்டதனால், போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் எதிர் வரும் டிசம்பர், தை, மாசி, மாதங்களில் பாரிய வெள்ள அனர்தம், ஏற்படுமாக இருந்தால் அவற்குக்கு உரிய தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.


மேலும் போரதிவுப் பற்றுப் பிரதேசத்தில் இலகுவில் வருடாந்தம் மழை காலங்களில், வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்படும், வேத்துச்சேனை, மற்றும், பட்டாபுரம், ஆகிய இரு கிராமங்களும் இவ்வருடமும் வெள்ள அனத்ததினால் பாதிப்புறும் பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுதல், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான கட்டிடவசதி, உணவு, மற்றும் முதலுதவி, மருத்துவ வசதிகள், போன்ற பல விடையங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.


போரதிவூப்பற்று பிரதேச செலாளர் என்.வில்வரெத்தினத்தின் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் இலங்கை இராணுவத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரிக்கேடியர் கே.எச்.பி.பி.பெர்ணாந்து, வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.சி.பி.வெலஹெதர, மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் த.துஷியந்தன், மற்றும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், கிராம சேவை உத்தயோகஸ்தர்கள். பொலிஸ், விசேட அதிரடிப்படை, இலங்கை இராணுவ, மற்றும் கடற்படை உத்தியோகஸ்தர்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். 









SHARE

Author: verified_user

0 Comments: