மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா
வித்தியாலயத்தில் கல்வி பொத தர உயர்தரத்தில் கணித, விஞ்ஞான துறைகளை
ஆரம்பித்து முதல்தடவையாக இவ்வருடம் மாணவர்கள் பரீட்சைக்கு
தோற்றியிருந்தனர்.
இதுபோன்று இனிவரும் வருடங்களிலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தற்போது இப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இவர்களுக்கு மேலதிக வகுப்புகளுக்கு சென்று கல்வி கற்பதற்கு பணவசதியின்றியும் கல்வி கற்றுக் கொண்டு வருகின்றனர்.
அவ்வாறான மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக விடுதி அமைத்து கல்வி கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இருப்பினும் இம்மாணவர்களுக்கான உணவு மற்றும் கற்றல் கற்பித்தலுக்காக பல வசதிகளும் தேவையாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் அவர்களின் ஏற்பாட்டில் வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன் அவர்களின் தலைமையில் புதன்கிழமை (26) வித்தியாலயத்தில் சுவிஸ் உதயம் அமைப்பின் நிருவாகத்தினரை அழைத்து இம்மாணவர்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதில் உதயம் சுவிஸ் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம், உதயம் கிழக்கு தலைவர் எஸ்.விமலநாதன்(பிரதிக்கல்விப் பணிப்பாளர், பட்டிருப்பு வலயம்) செயலாளர் பி.பாலச்சந்திரன்(கோட்டக்கல்விப் பணிப்பாளர், போரதீவுபற்று), மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன், பிரதி அதிபர் ஜி.சண்முகநாதன், உதயம் கிழக்கு அமைப்பின் உறுப்பினர் ஆ.புட்கரன்(அதிபர்), பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் க.சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் இறுதியில் உதயம் அமைப்பினர் மாணவர்களுக்கான உணவு வசதியை ஏற்படுத்தி தருவதாக கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனர்.
இதுபோன்று மேலதிக வகுப்புகளுக்காக உதவிகள் கிடைக்குமிடத்து இம்மாணவர்களின் கல்வி இன்னும் ஒளிமயமாகும் என்பதில் எவ்வித ஐயமில்லை

0 Comments:
Post a Comment