14 Nov 2014

தமிழர்களுக்குப் பிரச்சனைகள் இருக்கின தமிழர்களின் பிரச்சனைகளை அரசாங்கம் தீர்க்கத்தான் வேண்டும்.

SHARE
தமிழர்களுக்குப் பிரச்சனைகள் இருக்கின தமிழர்களின் பிரச்சனைகளை அரசாங்கம் தீர்க்கத்தான் வேண்டும். எமது தமிழ் மக்களைப் பாதுகாத்து எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகத்தான் நான் அரசாங்கத்தில் இருக்கின்றேன். இதனை விடவேறு ஒரு காரணமுமில்லை. இச்செயற்பாடு ஒருபுறம் சென்று கொண்டிருக்க அபிவிருத்திகளையும் துரிதப்படுத்த வேண்டும்.


எப்போதும் அரசியல் பலத்தை உருவாக்க வேண்டும் அப்போதுதான் பாரிய பலத்தினைக் கொண்டு வரமுடியும். எதிர்ப்பு அரசியலுக்க எமது மக்கள் இதவரை காலமும் வாக்களித்து வந்ததினால் எதுவித பலனும் இல்லை.  


என மீள் குடியேற்றப் பிரதியமைசசர் விநாயகமூர்ததி முரளிதரன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கிராமத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (14) இலவச குழாய் மூலமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கும் நிகழ்வு  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக்க கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்;து தெரிவிக்குகையில்…. 


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள 90 வீதமான மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.

அது போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 வீதம் மிச்சாரத் தேவையும் ப+ர்தியாக்கப் பட்டுள்ளது. நான் இம்மாவட்டத்தில் முன்னெடுக்கும் வேலைத் திடங்கள் யாவும் நீடித்து நிலைத்திருக்கத் தக்கதாகும். அரச வளங்களை எவ்வாறு மக்கள் மத்தியில் கொண்டு வராலாம் என்பதை நான் தற்போது செய்து காட்டியுள்ளேன்.


4500 மில்லியன் ரூபாய் செலவில் கித்தூள் மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களை இணைக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த செயற்றிட்டம் முடிவுற்றதும் கல்குடா தொகுதி மக்களுக்கும் குழாய் மூலம் நீர் வழங்கப் பட்டுவிடும்.  இவ்வாறான அபிவிருத்திகள் தொடர்ச்சியான நடைபெற வேண்டுமான இருந்தால் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.


தமிழர்களுக்குப் பிரச்சனைகள் இருக்கின தமிழர்களின் பிரச்சனைகளை அரசாங்கம் தீர்க்கத்தான் வேண்டும். எமது தமிழ் மக்களைப் பாதுகாத்து எமது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காகத்தான் நான் அரசாங்கத்தில் இருக்கின்றேன். இதனை விடவேறு ஒரு காரணமுமில்லை. இச்செயற்பாடு ஒருபுறம் சென்று கொண்டிருக்க அபிவிருத்திகளையும் துரிதப்படுத்த வேண்டும்.


எப்போதும் அரசியல் பலத்தை உருவாக்க வேண்டும் அப்போதுதான் பாரிய பலத்தினைக் கொண்டு வரமுடியும். எதிர்ப்பு அரசியலுக்க எமது மக்கள் இதவரை காலமும் வாக்களித்து வந்ததினால் எதுவித பலனும் இல்லை.  


தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனப்படும் கட்சியானது எப்போதும் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்துத்தான் இயங்குகின்ற கட்சியாகத்தான் காணப் படுகின்றது. யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்,  இராணுவ முகாம்கள் இருந்த இடங்களில் மக்களைக் குடியமர்த்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துதான் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு ஆதரதவளிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கிழக்கு மாகாணத்தைப் பற்றிய அக்கறையே இல்லை. எனவே இவை அனைத்தினையும் கவனத்தில் கொண்டு எமது மக்கள் அனைவரும் ஒன்றினைந்து எமது மட்டக்களப்பு மாவட்டத்திகென ஒரு தனித்துவமான அரசியலை உருவாக்க வேண்டும்.


கடந்த காலைங்களைப்போல் மட்டக்களப்பு மாவடத்தில் இராணுவ கெடுபிடிகளோ, கடத்தல்களோ, காணாமல்போவதோ, கிடையாது. அவ்வாறு நடப்பதற்கு நாம் ஒருபோதும் விடமாட்டோம்.


கடந்த யுத்தத்தினால் பல இழப்புக்களை நாம் எதிர் கொண்டுள்ளோம். ஆனால் அந்த யுத்ததினை நிறுத்தி நல்லதொரு சமாதானத்தை நான் ஏற்படுத்தித் தந்துள்ளேன். இதனால்தான் இந்த நாட்டில் அனைத்து மக்களும் சந்தோசமாக இருக்கின்றார்கள். யுத்தம் தொடர்ந்திருந்தால் இன்னும் பாரிய விளைவுகள் ஏற்பட்டிருக்கம்.


இலங்கையில் நமது சொந்தக்கார் எவரும் ஜனாதிபதியாக வரமாட்டார் ஆனால் சிங்களவர் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவார். எனவெ அதிலும் வெல்லக் கூடிய வேட்பாளருக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் வெற்றியடையப் போகின்றார்.


ஜனாதிபதித் தேர்;தலில் போட்டியிடுவதற்கு எதிரணியில் ஒருவரும் முன்வருகின்றார்களில்லை, ரணில் விக்கிரம சிங்கவுககும் போட்டியிடுவதற்குத் துணிவில்லை. எனவே எமது மட்டக்களப்புவாழ் தமிழ் மக்கள் அனைவரும் கடந்த காலங்களைப்போல் எதிர்க் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்காமல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: