5 Nov 2014

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் கல்வி பொதுதர சாதாரண தர மாணவர்களுக்கு இலவச கல்விக் கருத்தரங்கு

SHARE


மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையுடன் பட்டிப்பளைப்பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் மண்முனை தென்மேற்கு கோட்டத்திலிருந்து  கல்வி பொதுதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக்கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை (04) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் த.மேகராசாவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கருத்தரங்கானது பட்டிப்பளைப் பிரதேசத்திலுள்ள கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், முதலைக்குடா மகா வித்தியாலயம், கடுக்காமுனை வாணி வித்தியாலயம் ஆகிய மூன்று நிலையங்களில் நடைபெற ஏற்பாடுள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

இதில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு இக்கருத்தரங்கு இம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் ஆரம்ப நகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஞா.சிறிநேசன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையின் தலைமை வண்ணக்கர் ப+.சுரேந்திரராசா, செயலாளர் இ.சாந்தலிங்கம், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: