6 Nov 2014

மட்.பட்.களுமுன்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இரத்ததான முகாம்.

SHARE

(சக்தி)

மட்.பட்.களுமுன்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலை அதிபர் சி.சிவபாதம் அவர்களின் தலைமையில் இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.

பிரதி அதிபரும் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டருமான க.சதிரகுமார் அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் மட்.களுமுன்தன்வெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவு, மற்றும் களுமுந்தன்வெளி கிராம மட்ட அமைப்புக்கள், ஒன்றிணைந்து இந்த இரத்த தான முகாமினை ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு இரத்த வங்கியிலிருந்து வந்த வைத்திய குழுவினர் இரத்த சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமப்புறம் ஒன்றில் இருந்து முதன் முதன்முதலாக எம்மை அழைத்து இவ்வாறு இரத்தம் வழங்கிய இக்கிராம மக்களுக்கு எமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்தோடு, இன்றய இந்த இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய கிராமங்களுக்கும், ஒரு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. என இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி க.விவேக் தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு இரத்த வங்கியில் இரத்தம் போதாதுள்ளது இதுபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராம மக்களும் முன்வந்து இரத்ததானம் செய்வார்களேயானால் இம்மாவட்டத்தில பற்றாக்குறையாக வரும் இரத்தம் பூர்தியாக்கப்படுவதோடு இருதயமாற்று சத்திர சிகிச்சை, விபத்து, மற்றும் தலசீமியா நோய், போன்றவற்றிற்கு அதிகளவு இரத்தம் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த இரத்த தான நிகழ்வில் ஆசிரியர்கள், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவு தொண்டர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இணைந்து இரத்ததானம் செய்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: