பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஸன் அபிவிருத்தி திட்ட நிறுவனமும், உக்டா எனும் நிறுவனமும் இணைந்து இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு கோட்டத்தில் மாணவர்களை சித்தியடைய வைப்பதற்காக முன்னின்று உழைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (04) உக்டா சமூகவள நிலையத்தில் இடம்பெற்றது.
உக்டா நிறுவன தலைவர் இ.குகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள், ஆரம்பப்பிரிவு சேவைக்கால ஆசிரிய ஆலோசகர், ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் பணிப்பாளர், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் 2015ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களும் வரவேற்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் வேள்ட்விஸன் நிறுவன வலய முகாமையாளர் அலெக்ஸ் பென்சமின், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தித்திட்ட முகாமையாளர் ஜே.அனுராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன், வேள்ட்விஸன் நிறுவன கல்வித்திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜ், மண்முனை தென்மேற்கு கோட்டப் பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர
0 Comments:
Post a Comment