23 Nov 2014

ஒரு பிள்ளைக்கு ஒரு மரம் நாளைக்காய் உலகை பாதுகாப்போம்

SHARE
Add caption
வேள்ட்விஷன் அமைப்பின் பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தி திட்டமும், உக்டா எனும் நிறுவனமும் இணைந்து “ஒரு பிள்ளைக்கு ஒரு மரம் நாளைக்காய் உலகை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களுக்கு மரக்கன்றுகள்  வழங்கும் உத்தியோக பூர்வ நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட பண்டாரியாவெளி மகாவித்தியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (22) நடைபெற்றது.
இங்கு போது ஒரு பிள்ளகை;கு 3 மரக்கன்றுகள் வீதம் பயன்தரக்கூடிய மா, பலா, கொய்யா, போன்ற பழமரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்றயதினம் பட்டிப்பளைப் பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 6500 இற்கு மேற்பட்ட பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டதாக உக்டா நிறுவனம் தெரிவித்தது.
இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகள், சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர், வேள்ட்விஷன் நிறுவன உத்தியோகத்தர், பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராமசேவை உத்தியோகத்தர்கள் உக்டா நிறுவன அங்கத்தவர்கள், சிறுவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.










SHARE

Author: verified_user

0 Comments: