10 Jul 2026

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமர்வு -

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமர்வு - இலங்கையில் சிறந்த பிரதேச சபையாக மாற்றுவதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம் தவிசாளர் வேண்டுகோள்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 14 வது சபை அமைப்பு இன்று வெள்ளிக்கிழமை(10.07.2026) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் சபா மண்டபத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது. 

ஆரம்பத்தில் இப்பிரதேச சபைக்கு புதிதாக நியமனம் பெற்று வந்துள்ள சபை செயளாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் ஏனைய சபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டனர். 

இதன்போது சபையின் குறை நிரப்பு பிரரேரணை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் பல தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. 

ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை நிறுத்துதல், தனியார் கல்வி நிலையங்களினூடாக கல்விச் சுற்றுலா செல்வதை இரத்துச் செய்தல், களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பு நிலையத்தில் புதிதாக கடைத் தொகுதிகளை அமைத்தல், பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னால் வீதியில் இடப்பட்டுள்ள வெள்ளைக் கோடுகளை அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு தெரிவித்தல், இப்பிரதேசத்தில் பிரதேச சபையின் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்குரிய அனுமதியைப் பெறுவதற்கு மக்களுக்கு 6 மாத காலம் அவகாசம் வழங்குதல், களுவாஞ்சிகுடி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதியை கிழக்கு மாகாண ஆளுனரின் பங்குபற்றுதலுடன் திறந்து வைத்தல், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பு நிலையத்தை குத்தகைக்கு விடுதல், சேகரிக்கப்பட்டுள்ள கழிவுகளை புதைத்தல், மரண வீடுகளில் மதுபாவனை, வெற்றிலை மெல்தல், புகைத்தல், போன்ற பாவனைகளை முற்றதக நிறுத்துதல் அவை தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை இடுதல் போன்ற பல தீர்மானங்கள் இதன்போது எடுக்கப்பட்டன.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் கட்சி பேதங்கள் அற்ற முறையில் முன்னெடுக்கப்படும். இலங்கையில் சிறந்ததொரு பிரதேச சபையாக இப்பிரதேச சபையாக இப்பிரதேச சபையை மாற்ற வேண்டும் அதற்கு அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இதன்போது தவிசாளர் வினோராஜ் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: