18 Nov 2014

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் பதவிப் பிரமாணம் ஆகிய நிகழ்வுகளைக் குறித்து மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட விழா

SHARE
 ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் பதவிப் பிரமாணம் ஆகிய நிகழ்வுகளைக் குறித்து மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட விழா தேசியக் கொடிகளைத்தாங்கிய மாணவர் ஊர்வலத்துடன் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் ஏஎம் அஹமட் லெப்பை இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானக் கல்வியதிகாரி எம்ஜிஏ நாஸர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின்போது மாணவர் ஊர்வலம் பலமரக்கன்று நடுதல் மற்றும் தாகசாந்தியளித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஏறாவூர் -அல் ஜிப்ரியா வித்தியாலயம் மற்றும் அல் முனீறா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் தேசியக் கொடிகளை அசைத்த வண்ணம் ஊர்வலமாகச் சென்றனர். ஜிப்ரி தைக்கா பள்ளிவாயல் முன்பாக ஆரம்பமான அந்த ஊர்வலம் புன்னக்குடா வீதி வழியாகச் சென்று வலயக்கல்வியலுவலக முன்றலில் நிறைவடைந்தது. அதையடுத்து அங்குள்ள வளாகத்தில் பழமரக்கன்று நடப்பட்டதுடன் குளிர்பானமும் பரிமாறப்பட்டன.

முறைசாராக் கல்விக்கான  உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏஎல்எம் சரீப் தலைமையில் உரையரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதி மற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் கோட்டக்கல்வியதிகாரிகள் பாடஇணைப்பாளர்கள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் பிரசன்னமாயிருந்தனர்







SHARE

Author: verified_user

0 Comments: