18 Nov 2014

பயணிகள் பேருந்து வாய்க்காலில் குடைசாய்ந்துள்ளது. அதில் பயணித்தவர்கள் தெய்வாதினமாக காப்பாற்றப்பட்டுள்ளனர்

SHARE


மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாளம்பைக்கேணி 4, பிரிவிலிருந்து இன்று (18) செவ்வாய்க்கிழமை காலை கல்முனை நோக்கிப் புறப்பட்ட கல்முனை சாலைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து பலத்த மழை காரணமாக வாய்க்கலில்; குடைசாய்ந்துள்ளது.

இதுதொடர்பாக மேலும் தெரியவருகையில் நாளாந்தம் இப்பேருந்து மத்தியமுகாம் பகுதியில் இருந்து சாளம்பக்கேணி ஊடாக கல்முனைக்குச் செல்வது வழமை  இன்று காலை 6.30 மணியளவில் மத்தியமுகாமில் இருந்து கல்முனை நோக்கிச் செல்லும்போதே இவ்விபத்து இடம்பெற்றுளளது

இதில் பயணம் செய்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் எதுவித காயமும் இன்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மத்தியமுகாம் வீதிப் போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்


SHARE

Author: verified_user

0 Comments: