பதுளை கொஸ்லந்தை மீரியாபெத்த போன்ற இடங்களில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாவனைப் பொருட்கள் சேகரிக்கும் நிவாரணப்பணி இன்று வெள்ளிக் கிழமை (31) களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி யா.வசந்தகுமாரன் தலைமையில் பிரதேச சபை ஊழியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பொதுமகளும் இதில் கலந்து கொண்டு பொருட்களையும், பணங்களையும், அன்பளிப்புச் செய்தனர்.
இதன்போது சேகரிக்கப்படும் பெருட்கள் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் நேரடியாக குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் திருமதி யா.வசந்தகுமாரன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment