வெறுமனே தமிழ் வீரசனங்களைப் பேசிவிட்டு ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுத்துவிட்டு அவர்களது தொகுதியில் இல்லமல் கொழும்பிலே இருந்து கொண்டு நாடாளுமன்றத்திற்கு வந்தும் அமர்வுகளிலும், கலந்து கொள்ளாமல் நாடாளுமன்ற சிற்றுண்டிச் சாலையிலே மணித்தியாலக் கணக்கிலே உட்கார்ந்து கொண்டு நேரத்தைக் கழிக்கின்றார்கள், இங்குள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களை நாடாளுமன்றத்திற்குள் பார்க்க முடியாது வெளியில்தான் காணமுடியும். தமிழ் மக்கள் வாக்கழித்த அந்த தமிழ் அரசியல் வாதிகள் என்பதை இங்குள்ள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் உண்மை.
என தகவல் தொழில் நுட்ப பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதிவுக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மண்டூர்-13 விநாயகர் வித்தியாலயாலயத்தில் தயட்டக் கிருள தேசத்திற்கு மகுடம் - 2013 அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்; 45 லெட்சம் ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்ட கணணி ஆய்வ கூடத்தை இன்று புதன் கிழமை (05) திறந்து வைத்து விட்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில்….
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மஹிந்த சிந்தனை ஊடாக கிராமப் பாடசாலைகளை விருத்தி செய்யும் நோக்கோடு கணணி அய்வு கூடங்களை அமைத்து வருகின்றார். இதனை எமது அமைச்சர் ரஞ்சித் சியம்யிலாப்பிட்டிய அனைத்து மாவட்டங்களுக்கும் இன மத வேறு பாடின்றி முன்னெடுத்துச் சென்;று கொண்டிருக்கின்றார். மட்;டக்களப்பு மாட்டத்திற்கு மட்டும் 630 லெட்சம் ரூபாய் நிதி இந்த கணணி ஆய்வு கூடங்கள் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் மக்களுக்காக வேண்டி கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்கலாம், தளபாங்களைப் பெற்றுக் கொடுக்கலாம், எதை வேண்டுமானாலும் செய்து கொடுக்கலாம். அனால் பிள்ளைகளின் பெறுபேறுகள்தான் பாடசாலையின் ஊன்றுகோலாக அமைகின்றன. அந்த பெறுபேறுகளை எங்களால் பெற்றுக் கொடுக்க முடியாது. அதனை அதிபர் ஆசிரியர்கள்தான் எமது தமிழ் சமூகத்திற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் ஏனெனில் எமது சமூகத்தின் எழுச்சிக்கு ஆசிரியர்கள்தான் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் வாதிகளால் செய்து கொடுக்க முடியாததை ஆசிரியர் சமூகத்தினால் செய்து கொடுக்க முடியும்.
எனது 12 வருட அரசியல் வாழ்வில் கொழும்பு மாவட்டத்தில் நான் வீதிகள் உட்பட ஏனையவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில்லை அனைத்தும் கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் கல்விச் சமூகத்திற்காகத்தான் செலவு செய்கின்றேன்.
அரசாங்கதிடம் சண்டையிட்டு கடந்த 4 வருடங்களில் 20 கோடி ரூபாவிற்கு மேல் நிதிகளைப் பெற்று கொழும்பிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்திக்குச் செலவு செய்துள்ளேன்;. அந்த நிலமை மட்டக்களப்பிலும் வரவேண்டும்.
கொழும்பு மாவட்டத்திலுள்ள மாணவர்களை விட வடக்கு கிழக்கிலுள்ள மாணவர்கள் கல்வியில் திறமையானவர்கள் யுத்தகாலத்திற்கு முன்னர் வட கிழக்கில் இருந்துதான் டாக்கடர்கள், பொறியியலாளர்கள், அதிபர்கள், அமைச்சின் செயலாளர்கள், உட்பட பெரும்பாலான அரச திணைக்களங்களின் தலைமை அதிகாரிகளாக வட கிழக்கைச் சேர்ந்தவர்கள்தான் இருந்துள்ளார்கள். ஆனால் அந்த கல்விமான்கள் இப்போது யுத்த்திற்குப் பின்னர் இல்லை. என்கே போயுள்ளர்கள். தற்போது திறமையான தமிழ் அதிகாரிகள் மிக மிக குறைவாகத்தான் உள்ளார்கள் காரணம் அனைவரும் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். எனவே மீண்டும் தமிழ் கல்வி சமூகத்தை கட்டியழுப்ப வேண்டும்.
கொழும்பு மாவட்டத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினாராக இருந்து கொண்டு அங்குள்ள 3 தேசிய பாடசாலைகளையும், 43 மாகான பாடசாலைகளையும், என்னால் அபிவிருத்தி செய்யமுடியுமாயின் ஏன் மட்டக்களப்பு மாவடத்திலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களால் இங்குள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடியாது.

இந்த அரசாங்கதை நல்லது என்று நான் சொன்னதும் கிடையாது சொல்லப்போதும் கிடையாது. இதற்குப் பயப்படவும் மாட்டேன் வெட்கப்படவும் மாட்டேன் ஆனால் இந்த அரசாங்கத்திடமிருந்து எமது மக்களுக்குத் தேவையானவற்றை எவ்வாறு தட்டிக் கேட்டகலாம் என்ற யுக்தி என்னிடம் உள்ளது. இதனை ஏன் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது.
ஆட்சிமாற்றம் எமக்கு முக்கியமில்லை எமது மக்களின் அபிவிருத்தியும், உரிமையும்தான் முக்கியமாகும். ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி வேண்டாம் என்கின்றார்கள், 10 வருடகாலமாக உரிமையைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அபிருத்தியும் உரிமையும் ஒரே நேரத்தில்தான் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் 50 லெட்சம் ரூபாய் நிதி முற்றுமுழுதாக இங்குள்ள மக்களுக்கு பயன்படாமல் குறிப்பிட்டளவு பணம் மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் செல்கின்றது. இது உண்மை இதற்குரிய ஆதாரம் என்னிடம் உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வடகிழக்கு தமிழ் மாணவர்கள் கல்வியில் எழுச்சி பெறவேண்டும் என்ற சிந்தனை இல்லை, பாடசாலைகளைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது.
வட மாகாணசபையின் கீழ் இயங்குகின்ற பாடசாலைகளைக் கூட வடமாகாணசபை கவனிப்பதில்லை, அதுபோன்றுதாக் கிழக்கு மாகாணசபையும், இந்த மாற்றத்தினை மக்கள் அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர் பார்க முடியாது. எனவே மாற்றத்தினை மக்கள் கொண்டு வரவேண்டும். என அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment