18 Nov 2014

மட்.தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் தயட்ட செவண தேசியமர நடுகைத் திட்டம் – 2014

SHARE

மகிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின்கீழ் தேசிய ரீதியில் வருடாவருடம் மேற்கொள்ளப்படும்  தயட்ட செவண தேசிய மர நடுகைத் திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளிலும் மதஸ்தலங்களிலும் பொது இடங்களிலும் மர நடுகை செய்யப்பட்டது.


அந்த வகையில் போரதீவுப்பற்று பிரதேசசெயலகத்தின் ஏற்பாட்டில் மத்தியசுற்றாடல் அதிகார சபையின் அனுசரணையுடன் மட்.தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தில் அதிபர் ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இநநிகழ்வு இன்று செவ்வாய் கிழமை (18) இடம்பெற்றது.

இதன்போது மட்.தும்பங்கேணி கண்ணகி வித்தியாலயத்தியாலய சுற்றாடல் கழக மாணவர்களுக்கு மத்தியசுற்றாடல் அதிகார சபையினால் தொப்பி அணிவிக்கப் பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச போரதீவுப்பற்று செயலாளர் என்.வில்வரெத்தினம், பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் கி.லோகராசா, கிராமசேவக உத்தியோகத்தர்  எஸ்.சக்திவேல், வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எஸ்.ஏகநாதன், சுற்றாடல் முன்னோடி மாணவர்கள், மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச செயலாளர் உரையாற்றுகையில்……
தற்போது எமது நாட்டில் 23 வீதமான காடுகளே காணப்படுகின்றன என்றும் 2020ம் ஆண்டினை அடையும்போது 32 வீதமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். தாவரங்களே எமது ஜீவநாடிகள், இதன் மூலமே உலக இயங்குகின்றது. இதனைக் கருத்திற்கொண்டே இவ்வாறான திட்டங்கள் அமுல் படுத்தப்படுகின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சுற்றாடல் முன்னோடி மாணவர்கள் செயற்பட வேண்டும். இதற்கு கிராமத்தின் பொது அமைப்புக்கள் கைகோர்த்து செயற்பட வேண்டும் எனக் கூறினார். 













SHARE

Author: verified_user

0 Comments: