18 Nov 2014

மகிழடித்தீவில் குடிநீர் தாங்கி திறப்பு

SHARE

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட மகிழடித்தீவு கிராமத்தில்; பட்டிப்பளை பிராந்திய வேள்ட்விஸன் அபிவிருத்தி திட்டத்தின் அனுசரணையுடன் கிராமிய குடிநீர் வழங்கல் திட்டத்தின் கீழ் அக் கிராமத்தின் அமைப்புக்களுடன் இணைந்து அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கலுக்கான நீர்த் தாங்கி திறப்பு விழா இன்று(17) திங்கட்கிழமை மகிழடித்தீவு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குடிநீர் வழங்கலுக்கான நீர்த் தாங்கி 1696747 ரூபாய் செலவில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அக்கிராமத்தைச் சேர்ந்த 23 குடும்பங்களை உடைய 81 பேர் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம், தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.வினோதன், வேள்ட்விஸன் நிறுவன கள நடவடிக்கைக்கான வலய முகாமையாளர் எ.அலெக்ஸ் வென்சமின், வேள்ட்விஸன் நிறுவன பட்டிப்பளைப் பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் ஜி.ஜே.அனுராஜ், நாவிதன்வெளி பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் பிரமசந்திரன், திட்ட இணைப்பாளர் ந.சபேசன், திட்ட இணைப்பாளர் இ.அமுதராஜ், மட்.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை கிராமசேவை உத்தியோகத்தர் க.சிவகுருநாதன் உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: