14 Nov 2014

கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தைக்கு செல்லவுள்ளனர்.

SHARE

 கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் நாளை 15 ஆம் திகதி சனிக்கிழமை மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தைக்கு செல்லவுள்ளனர்.

கிழக்கிலிருந்து ஒன்றியத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் செல்லும் இந்து ஊடகவியலாளர்கள் புதிதாக குடியமர்த்தப்பட்ட முகாம்களில் மக்கள் எதிர்நோக்கும் இன்னோரன்ன விடயங்கள் பற்றி ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத்தின் உறுப்பினர்கள் நேரடியாக கொஸ்லந்தை சென்று நிவாரணப்பொருட்களைக்கையளிப்பதோடு சமகால உண்மை நிலவரங்களை வெளிக்கொணரவும் ஆலோசனை வழங்கப்பட்டு கடந்த களுவாஞ்சிக்குடி கூட்டத்தில் ஆத்மாஞ்சலி நிகழ்வும் பயணம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமையையும் தெரிந்ததே.

ஒன்றியம் ஆரம்பித்து ஒரு மாத காலத்துள் இவ்வாறான பயணத்தை மேற்கொள்வது சந்தோசத்தையளிக்கின்றதென ஒன்றியச்செயலாளர் சிவம் பாக்கியநாதன்தெரிவித்தார்.

மனித அபிவிருத்திதாபன நிவாரணமும் இன்று செல்கிறது.
இதேவேளை மனித அபிவிருத்தித்தாபனத்தின் ஏற்பாட்டில் கிழக்கில் சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு காரைதீவு நிவாரணமையத்தின் தலைவர் பொன்.ஸ்ரீகாந் தலைமையில் இன்று அம்பாறை வழியாக மண்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லந்தைக்கு செல்லவுள்ளனர்.
நிவாரணச்சேகரிப்பிலும் பொதிசெய்வதிலும் இரவுபகலாக முன்னின்றுழைத்த ஸ்பீட் அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளின் நிவாரணப்பணியாளர்களும் கொஸ்லந்தை பயணத்தில் இணைந்துகொள்கின்றனர்.

அனைத்தும் இன்றுசனிக்கிழமை நண்பகலளவில் கொஸ்லந்தைக்கு கொண்டுசெல்லப்பட்டு அம்மக்களுக்கு வழங்கி வைக்கப்படுமென்று மனிதஅபிவிருத்தித்தாபன நிவாரண மைய ஏற்பாட்டாளர் புரவலர் பொன்னையா ஸ்ரீகாந் தெரிவித்தார்.

தமிழ் சி.என்.என். இணையத்தள ஆதரவில் முதற்றடைவையாக ஒரு தொகுதி புதிய உடுப்புகள் மற்றும் கருவாட்டுப்பொதிகள் வழங்கப்படவுள்ளன. மேலும் சமையலறை உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்படவுள்ளன என தமிழ் சி.என்.என்.இன் கிழக்குச்செய்தியாளர் தெரிவித்தார்.

மனித அபிவிருத்தித்தாபனம் கிழக்கில் மேற்கொண்ட நிவாரணப்பணிகளில் தமிழ் சி.என்.என். இணையத்தளம், காரைதீவு நியூஸ் இணையத்தளம், காரைதீவு ஓர்க் இணையத்தளம், காரைதீவு.கொம் இணையத்தளம் உள்ளிட்ட பல இணையத்தளங்கள் களத்தில் நின்று உற்சாகமளித்தன.

(காரைதீவு நிருபர்)
SHARE

Author: verified_user

0 Comments: