23 Nov 2014

ஒரு வார காலமாக தொடர்ச்சியான மழை 119.7 மில்லி மீற்றர் மழை விழ்சி பதிவு, வீதிகள் வெள்ளத்தில்…..

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தின் இயல்பு நிலையில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் படுவான்கரைப் பிரதேசத்திலும், பலகிராமங்களும், வயல்களும், வீதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் வெள்ளநீர் ஊடறுத்துள்ளது. செல்கின்றன.
படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள முனைத்தீவு, பெரியபோரதிவு, வேத்துச்சேனை, பண்டாரியாவெளி, பட்டாபுரம், போன்ற பல  கிராமங்களில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதனால் அக்கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள வீதிகளில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையும் காணப்படுகின்றது.

இந்நிலையில் மண்டூர்-வெல்லாவெளி வீதி, பெரியபோரதீவு-பழுகாமம் வீதி, அப்பிளாந்துறை-தாந்தாமலை வீதி, மண்முனை-மகிழடித்தீவு வீதி போன்றவற்றில் வெள்ள நீர் ஊடறுத்துச் செல்வதனால் இவ்வீதிகளில் மக்கள் போகுவரத்துச் செய்வதில் பலத்த சிரமங்களையும், எதிர் கொண்டுள்ளனர்.

இதேவேளை மண்டூர்-வெல்லாவெளி வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் வேகமாகப் பாய்வதனால் மண்டூரிலிருந்து மட்டக்களப்புக்குச் தனியார் பேரூந்து போக்குவரத்தும் நேற்றிலிருந்து (22) நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு முகத்துவாரம் சனிக்கிழமை (22) பிற்பகல் 3 மணிக்கும், கோட்டக்கல்லாறு முகத்துவாரம் நேற்றயதினம் பிற்பகல் 4 மணிக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உத்தரவுக்கமைய வெட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவாட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜனை ஞாயிற்றுக்கிழமை (23) காலை தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பெய்துவரும் மழையினால் இதுவரையில் எதுவித இடம்பெயர்வுகளும் பதிவாகவில்லை, இரண்டு பிரதான முகத்துவாரங்கள் வெட்டப் பட்டுள்ளதனால் வெள்ள நீர் விரைவாக வழிந்தோடுடிவருகின்றது.

எது எவ்வாறு அமைந்தாலும் மாட்டத்தில் அனைத்து இடங்களிலும் கிராம மட்ட, பிரதேசமட்ட மறும் மாவட்ட மட்ட அனர்த பாதுகாப்புக்குழுக்கள் ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மவாட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று சனிக்கிழமை 22 ஆம் திகதி வரையில் நவம்பர் மாதம் மாத்திரம், 349.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமை (23) வரையில் 119.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் கூறினார்.


இந்த மழை வீழ்ச்சி கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் அண்டு நவம்பர் மாதம் 198 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், 2012 நவம்பர் மாதம் 365 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், 2011 ஆம் ஆண்டு 390 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், 2010 ஆம் ஆண்டு 410 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியிருந்ததாக  மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் நிலையப் பெறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் மேலும் கூறினார்.


எது எது எவ்வறு அமைந்தாலும் மட்டக்களப்பு மாவடத்தில் நேற்று காலையிலிருந்து மழை ஓய்ந்துள்ளதையும், ஒரு வாரத்தின் பின்பு சூரிய உதயத்தை அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்













SHARE

Author: verified_user

0 Comments: